Monday, February 11, 2008

மதுரையில் பிபிஓ நிறுவனத்தை துவக்கியது சுந்தரம் பைனான்ஸ்


மதுரை: மதுரையில் சுந்தரம் பைனான்ஸ் பிபிஓ (BPO) நிறுவனத்தை துவக்கியுள்ளது. சென்னைக்கு வெளியே இந்த நிறுவனம் அமைத்துள்ள முதல் பிபிஓ இதுவாகும்.இதில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 2009ம் ஆண்டுக்குள் ஊழியர்களின் எண்ணிக்கை 400 முதல் 500 ஆக உயரும் என இதன் நிர்வாக இயக்குனர் டி.டி.சீனிவாசராகவன் தெரிவித்தார்.முதல் கட்டமாக இன்சூரன்ஸ் துறை சார்ந்த பணிகளை இந்த பிபிஓ கையாளும். படிப்படியாக வேறு துறைகளிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மதுரையில் கிளையை துவங்கியுள்ளதன் மூலம் சுந்தரம் பைனான்ஸ் தனது வர்த்தகத்தை ரூ. 17 கோடியில் இருந்து அடுத்த சில ஆண்டுகளில் ரூ. 30 கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.சுந்தரம் பிபிஓவின் 75 சதவீத வர்த்தகம் உள்நாடுகளில் இருந்து கிடைத்துள்ளது. இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியால் தங்களுக்கு பாதிப்பு இருக்காது என சீனிவாசராகவன் தெரிவித்துள்ளார்.சென்னையில் சுந்தரம் பைனான்ஸ் 7 பிபிஓ கிளைகளை நடத்தி வருகிறது. இப்போது தான் மதுரையில் கிளையை துவக்கியுள்ளது.மதுரைக்கு வந்துள்ள முதல் பெரிய பிபிஓ நிறுவனமும் இதுவே.மதுரையில் சாப்ட்வேர் பார்க்குகள் அமைக்கும் வேலைகளும் மிக வேகமாக நடந்து வருகின்றன. இங்கு தங்கள் கிளைகளைத் துவங்க டிசிஎஸ், எச்சிஎல் ஆகிய முன்னணி ஐடி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments: